நூலாறு 2011 - வேலூர் புத்தகக் கண்காட்சி
கடந்த ஆண்டு, 2010 செப்டம்பரில் வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய நூலாறு 2010 மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே.
இந்த நிகழ்வில் தங்கள் நிறுவனம் சார்பில் கலந்துகொண்டு, தமிழக புத்தகச் சந்தையை விரிவாக்கும் எங்கள் முயற்சிக்கு உங்களுடைய பேராதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பாடுகள் மூலமாக பங்கேங்கும் ஒவ்வொரு பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் சிறந்த விற்பனையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். கண்காட்சிகள், மாலை நேர கூட்டங்கள் என பல நிகழ்வுகள் வாயிலாக நாங்கள் மேற்கொண்டுவரும் பிரமாண்டமான சந்தைப்படுத்தல் செயல்பாடுகள் தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் சிறப்பு சேர்க்கும்வகையில் உங்கள் பங்கேற்பு மேலும் உறுதிப்படுத்தும்.


